நவம்பர் 26, 2019
நேசர்கி அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், நேசர்கி, கர்நாடகா - அபராதம்
விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) இன் விதிகளின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 27 (2) இன் கீழ் ரிடன்ங்களை சமர்ப்பிக்காததற்காக, நேசர்கி அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், நேசர்கி மீது ரூ. 0.20 லட்சம் (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, காரணம் விளக்க அறிவிப்பை வங்கிக்கு அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, வங்கி, தனிப்பட்ட விசாரணையைக் கோரியது. நிகழ்வின் உண்மைகளையும், இந்த விஷயத்தில் வங்கியின் பிரதிநிதித்துவத்தையும் பரிசீலித்த பின்னர், மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1267 |