ஜனவரி 30, 2020
கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகள்- கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (மார்ச் 30, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-I./D-9/12.22.111/2016-17 உத்தரவின் படி) கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, நிறுவனத்தை மார்ச் 30, 2017 அன்று வணிக முடிவில் இருந்து வழிமுறைகளின் கீழ் வைத்தது.
2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கூறிய வழிகாட்டுதல் உத்தரவு ஜனவரி 29, 2020 தேதியிட்ட DOR.CO.AID.No.D-53/12.22.111/2019-20 உத்தரவின் படி மறு ஆய்வுக்கு உட்பட்டு ஜூலை 31, 2020 வரை நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்களின் தகவல்களுக்கு அறிவிக்கிறது.
3. மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1830
|