தேதி: மார்ச் 5, 2020
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிமுறைகள் - சிட்டி கோ-ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- திரும்பப் பெறும் வரம்பில் தளர்வு
சிட்டி கோ-ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. வழிகாட்டுதல்களின் செல்லுபடியாகும் தன்மை அடுத்தடுத்த வழிகாட்டுதல்கள் மூலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக அக்டோபர் 15, 2019 தேதியிட்ட DCBR.CO.AID.No.D-27/12.22.039/2019-20 த்தரவு மதிப்பாய்வுகளுக்கு உட்பட்டு, ஏப்ரல் 17, 2020 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போதுள்ள வழிகாட்டுதல்களின் படி, மற்ற நிபந்தனைகளுடன், ஒவ்வொரு சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையின் 5,000/- க்கு மிகாமல் ஒரு தொகை வைப்பீட்டாளரால் திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டது.
2. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்1949 பிரிவு 56 உடன் இணைந்த 35 A பிரிவின் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதன்மூலம் கீழ்கண்டபடி உத்தரவிடுகிறது -
மும்பையின் தி சிட்டி கோ-ஆபரேடிவ் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-5/12.22.039/2017-18 உத்தரவின் பாரா 1 (i) மற்றும் டிசம்பர் 12, 2018 தேதியிட்ட DCBR.CO.AID/D-24/12.22.039/2018-19 பின்வருமாறு மாற்றியமைக்கப்படலாம்.
“ஒவ்வொரு சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது கால வைப்பு கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலிருந்து (எந்த பெயரில் இருந்தாலும்)
₹10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) க்கு மிகாமல், வைப்பாளரால் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப் படலாம், அத்தகைய வைப்பாளர் எந்த வகையிலும் வங்கிக்கு கடன் பாக்கி வைத்திருந்தால், அதாவது கடன் வாங்குபவர் அல்லது ஜாமீன், வங்கி வைப்புகளுக்கு எதிரான கடன்கள் உட்பட, அந்த தொகை முதலில் தொடர்புடைய கடன்/கள் கணக்கில் சரிசெய்யப்படலாம்."
ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட உத்தரவு எண். DCBS.CO.BSD-I/D5/12.22.039/2017-18 இன் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மாறாமல் இருக்கும்.
3. மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் மார்ச் 5, 2020 தேதியிட்ட உத்தரவின் நகல், பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் ரிசர்வ் வங்கி, வங்கியின் நிதி நிலையில் திருப்தி அடைந்ததைக் குறிக்காது.
(யோகேஷ் தயால்)
தலைமைப் பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2024
|