ஏப்ரல் 29, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ்
உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, அக்டோபர் 26, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-3/12.22.163/2018-19 உத்தரவுகளின் படி, அக்டோபர் 29, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக அக்டோபர் 16, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-31/12.22.160/2019-20 உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஏப்ரல் 29, 2020 வரை நீட்டிக்கப்பட்டது.
2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கிய அக்டோபர் 26, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-3/12.22.163/2018-19 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வப்போது மாற்றியமைத்து, கடைசியாக ஏப்ரல் 29, 2020 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 24, 2020, தேதியிட்ட DOR.CO.AID/No.D-76/12.22.160/2019-20 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஏப்ரல் 30, 2020 முதல் அக்டோபர் 31, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.
3. பார்வையில் உள்ள உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் ஏப்ரல் 24, 2020, தேதியிட்ட DOR.CO.AID/No.D-76/12.22.160/2019-20 உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2286 |