ஏப்ரல் 03, 2020
ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை
(டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. செயல்பாட்டின் விவரங்கள் பின்வருமாறு:
வ. எண் |
செயல்பாடு நாள் |
அறிவிக்கப்பட்ட தொகை
(ரூபாய் கோடியில்) |
காலம் |
சாளர நேரம் |
திரும்பியளிக்கும் தேதி |
1. |
ஏப்ரல் 09, 2020 |
25,000 |
3 வருடம் |
10:30 AM 11:30 AM |
ஏப்ரல் 07, 2023 |
2. டி.எல்.டி.ஆர்.ஓ வின் இந்த தவணையின் கீழ் பெறப்பட்ட நிதி, தவணை செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
3. மார்ச் 27, 2020 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் பத்திரிக்கை வெளியீடு 2019-2020/2131 இல் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து செயல்பாட்டு வழிகாட்டுதல்களும் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2176 |