ஏப்ரல் 17, 2020
ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது
இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தைகள் மற்றும் நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. கோவிட்-19 இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் (எம்.எஃப்.ஐ) உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதற்காக, தொடக்க நிலையாக மொத்தம் ₹ 50,000 கோடி வரை இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ) பாலிசி ரெப்போ விகிதத்தில் மூன்று ஆண்டுகள் வரை, பொருத்தமான அளவுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. டி.எல்.டி.ஆர்.ஓ 2.0 இன் கீழ் பெறப்பட்ட நிதிகள் முதலீட்டு தர பத்திரங்கள், வர்த்தகத்தாள் (சி.பி) மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் (என்.பி.எஃப்.சி) மாற்ற முடியாத கடனீடுகள் (என்.சி.டி) ஆகியவற்றில் பயன்படுத்தப்படலாம். பெறப்பட்ட மொத்த நிதியில் குறைந்தது 50 சதவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பிரிக்கப்படலாம்:
-
மைக்ரோ நிதி நிறுவனங்களின் (எம்.எஃப்.ஐ) பத்திரங்கள் / கருவிகளில் 10 சதவீதம்;
-
சொத்து அளவு ₹ 500 கோடி மற்றும் அதற்குக் குறைவாக என்.பிஎஃப்.சி கள் வழங்கிய பத்திரங்கள் / கருவிகளில் 15 சதவீதம்; மற்றும்
-
500 கோடி முதல் ₹ 5,000 கோடி வரை சொத்து அளவு கொண்ட என்.பிஎஃப்.சி கள் வழங்கிய பத்திரங்கள் / கருவிகளில் 25 சதவீதம்.
முதலீட்டாளர் நிறுவனம் / நிறுவனத்தின் சமீபத்திய தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை படி சொத்து அளவு தீர்மானிக்கப்படும்.
3. இந்த வசதியின் கீழ் செய்யப்படும் முதலீடுகள், எச்.டி.எம் இலாக்காவில் சேர்க்க அனுமதிக்கப்பட்ட மொத்த முதலீட்டில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பினும், முதிர்வு வரை வைப்பு (எச்.டி.எம்) என வகைப்படுத்தப்படும். இந்த வசதியின் கீழ் வெளிப்பாடுகள் பெரிய வெளிப்பாடு கட்டமைப்பின் (எல்.ஈ.எஃப்) கீழ் கணக்கிடப்படாது.
4. டி.எல்.டி.ஆர்.ஓ 2.0 இன் கீழ் முதல் ஏலம் ஏப்ரல் 23, 2020 அன்று நடத்தப்படும். ஏலத்தின் விவரங்கள் பின்வருமாறு;
வ. எண் |
செயல்பாடு நாள் |
அறிவிக்கப்பட்ட தொகை (ரூபாய் கோடியில்) |
கெடு காலம் |
சாளர நேரம் |
திருப்பியளிக்கும் நேரம் |
1. |
ஏப்ரல் 23, 2020 |
25,000 |
3-வருடம் |
10:30 AM-11:30 AM |
ஏப்ரல் 21, 2023 |
5. இந்த வசதியின் கீழ் பெறப்பட்ட நிதிகள் டி.எல்.டி.ஆர்.ஓ 2.0 செயல்படுத்தப்பட்ட தேதியிலிருந்து 30 வேலை நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். இதுத் தொடர்பான உறுதி ஆவணம் ஒரு மாதத்திற்குள் நிதிச் சந்தைகள் செயல்பாட்டுத் துறைக்கும் (மின்னஞ்சல்) மற்றும் மேற்பார்வைத் துறைக்கும் (மின்னஞ்சல்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
6. டி.எல்.டி.ஆர்.ஓ திட்டத்தின் கீழ் இருக்கும் மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2237 |