சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது |
நவம்பர் 02, 2020
சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது
ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளின் மாற்றப்பட்ட வர்த்தக நேரங்கள், கோவிட் – 19 பெருந்தொற்றால் ஏற்பட்ட செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகரித்த சுகாதார அபாயங்கள் ஆகிய காரணங்களால் ஏப்ரல் 07, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
படிப்படியான பொது முடக்கத் தளர்வுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்றும் அலுவலக செயல்பாடுகளில் இருந்தக் கட்டுப்பாடுகளின் தளர்வுகள் காரணமாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளின் வர்த்தக நேரங்களை படிப்படியாக பழைய நிலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளின் வர்த்தக நேரங்கள், நவம்பர் 9, 2020 முதல் பின்வருமாறு இருக்கும்:
சந்தை |
தற்போதைய நேரம் |
மாற்றியமைக்கப்பட்ட நேரம் |
அழைப்பு / அறிவிப்பு / கால பணம் |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3:30 PM வரை |
அரசாங்க பத்திரங்களில் சந்தை ரெப்போ |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 2:30 PM வரை |
அரசாங்க பத்திரங்களில் முத்தரப்பு ரெப்போ |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3 PM வரை |
கமர்ஷியல் பேப்பர்ஸ் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3:30 PM வரை |
கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3:30 PM வரை |
அரசு பத்திரங்கள் (மத்திய அரசு பத்திரங்கள், மாநில மேம்பாட்டு கடன்கள் மற்றும் கருவூல பில்கள்) |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3:30 PM வரை |
வெளிநாட்டு நாணயம் (எஃப்சிஒய்) / அந்நிய செலாவணி டெரிவேட்டிவ் உட்பட இந்திய ரூபாய் (ஐஎன்ஆர்) வர்த்தகங்கள் * |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3:30 PM வரை |
ரூபாய் வட்டி வீத டெரிவேட்டிவ் கள் * |
10 AM முதல் 2 PM வரை |
10 AM முதல் 3:30 PM வரை |
*: அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதைத் தவிர மற்றவை |
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/577 |
|