22 மே 2023
ரெயின் போ பைனான்ஸ் இந்தியா லிமிடெட், சென்னை, தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள முதன்மை வழிகாட்டுதலான, செப்டம்பர் 01, 2016 தேதியிட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் -அமைப்பு ரீதியாக முக்கியத்துவமற்ற பொது வைப்புநிதி பெறாத நிறுவனங்கள் (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்கள், 2016 -ன் தரமான கடன்களுக்கான ஒதுக்கீடு மற்றும் மூலதனகடன் விகிதம் (லெவரேஜ் விகிதம்) தொடர்பான உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி மே 19, 2023 தேதியிட்ட உத்தரவின் மூலம், ரெயின் போ பைனான்ஸ் இந்தியா லிமிடெட், சென்னை, தமிழ்நாடு (நிறுவனம்) மீது ₹4.00 லட்சம் (நான்கு லட்சம் ரூபாய் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், இந்திய ரிசர்வ் வங்கியால் முன் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 58G-ன் துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (b) உடன் இணைந்த பிரிவு 58 B-ன் துணைப்பிரிவு (5)-ன் உட்பிரிவு (aa)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல.
பின்னணி
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் இணையதளத்திலுள்ள நிறுவனத்தின் சுயவிவரம், நிறுவனத்தால் ஆர்பிஐ-க்கு தாக்கல் செய்யப்படும் என்பிஎஸ் தரவுகள் மற்றும் சட்டப்பூர்வ தணிக்கையாளர் சான்றிதழ் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், நிறுவனம் தரமான கடன்களுக்கான தற்செயலான ஒதுக்கீட்டை உருவாக்கவில்லையென்பதும் அதிக மூலதனகடன் விகிதத்தைக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக நிறுவனத்தின் மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது.
தனிப்பட்ட மற்றும் வாய்வழி சமர்ப்பிப்புகளின் பரிசீலனையில் நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்துள்ளது
(யோகேஷ் தயாள்)
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2023-2024/265 |