மார்ச் 9, 2009
ஆளுநர் டாக்டர் D. சுப்பாராவ் கையெழுத்திட்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையிலும் உள்பொதித்து அச்சடிக்கப்படும் 'R' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய ரூ.100 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகள் வெளியிடப்படும்
ஆளுநர் டாக்டர் D. சுப்பாராவ் அவர்கள் கையெழுத்திட்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையில் உள்பொதித்து அச்சடிக்கப்படும் 'R' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய ரூ.100 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகள் விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட இந்த உள்பொதித்து அச்சடிக்கப்பட்ட எழுத்தைத் தவிர வேறு எந்த மாற்றமுமின்றி, கூடுதலான/புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆகஸ்ட் 24, 2005ல் ஏற்கனவே வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லாவிதத்திலும் ஒத்ததாக இவை இருக்கும். இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.100 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.
சபிதா பட்கர் உதவி மேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2008-2009/1468
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்