செப்டம்பர் 25, 2007
இந்திய விமான படையின் 75வது நிறைவு விழாவை (1932-2007) முன்னிட்டு
புதிய துருப்பிடிக்காத 2 ரூபாய் எவர்சில்வர் நாணயங்கள்
இந்திய விமான படையின் 75வது நிறைவு (1932-2007) விழாவை நினைவுகூறும் வகையில் இந்திய அரசு வெளியிடும் புதிய துருப்பிடிக்காத 2 ரூபாய் எவர்சில்வர் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. அந்த நாணயங்கள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
நாணயத்தின் மதிப்பு |
வடிவம் , எடை மற்றும் சுற்று விட்டம் |
உலோக விகிதம் |
இரண்டு ரூபாய் |
வட்டம் - விட்டம் 27மிமீ. |
துருப்பிடிக்காத எவர்சில்வர்
இரும்பு 83%
குரோமியம் 17% |
வடிவம்:
முன்புறம்: நாணயத்தின் முகம் இரு படுக்கை கோடுகளால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் நடுப்பகுதியின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் ‘2’ என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். கீழ் புறத்தில் ‘रुपये’ என்று இந்தியிலும் ‘Rupees’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்: நாணயத்தின் முகம், இந்திய விமானப்படையின் எழுபத்தைந்து ஆண்டுகால மகத்தான சேவையை பிரதிபலிக்கும்வண்ணம் அதன் முதல் சண்டை விமானமான – வாப்டி – மற்றும் பன்னோக்கு சண்டை விமானமான – SU 30 MK I – இவற்றின் படங்களை மத்தியில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
வெளி விளிம்பில் "प्लैटिनम जुबलि" என்று ஹிந்தியிலும் கீழ் விளிம்பில் PLATINUM JUBILEE என்று ஆங்கிலத்திலும் இவற்றிற்குமேல் 1932-2007 என்று சர்வதேச எண்களிலும் மத்தியில் இடது ஓரத்தில் INDIAN AIR FORCE என்று ஆங்கிலத்திலும் மத்தியில் வலது ஓரத்தில் "भारतीय वायु सेना" என்று ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
1906ஆம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இரண்டு ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே.
அஜித் பிரசாத்
மேலாளர்
பத்திரிகை வெளியீடு : 2007-2008/417 |