Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (176.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/07/2017
முதன்மை சுற்றறிக்கை – நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றும் வசதி

அறிவிப்பு எண்/2017-18/03
Ref. No. DCM (NE) G-1/08.07.18/2017-18

ஜூலை 03, 2017

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து வங்கிகள்

அன்புடையீர்

முதன்மை சுற்றறிக்கை – நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றும் வசதி

நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றும் வசதி குறித்த ஜூலை 18, 2016 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மைச் சுற்றறிக்கை எண் DCM (NE) G-1/08.07.18/2016-17ஐப் பார்க்கவும். திருத்தப்பட்ட முதன்மைச் சுற்றறிக்கை உங்கள் தகவல் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளது. www.rbi.org.in என்ற எங்கள் வலைத் தளத்தில் இச்சுற்றறிக்கையைக் காணமுடியும்.

இங்ஙனம்

(P. விஜய குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே குறிப்பட்டபடி


இணைப்பு

முதன்மைச் சுற்றறிக்கை – ஜூலை 03, 2017 தேதியிட்டது –
நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றும் வசதி

1. வங்கிக் கிளைகளில் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றும் வசதி

(a) பணப் பெட்டகங்கள் வைத்திருக்கும் நாட்டிலுள்ள எல்லாப்பகுதிகளிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் கீழ்க்கண்ட வாடிக்கையாளர் சேவையை சுறுசுறுப்பாகவும் ஆர்வத்தோடும் பொதுமக்களுக்கு செய்யவேண்டியது அவசியம். இந்த நோக்கத்திற்காகவே, பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்தை நாடுவது இதனால் தவிர்க்கப்படும்.

i. புதிய/நல்ல தரமான ரூபாய்தாள்கள்/ நாணயங்கள் எல்லா மதிப்பிலக்கங்களிலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குதல்

ii. பழைய கிழிந்த, சிதைந்த, குறைபாடுடைய நோட்டுகளை மாற்றித்தருதல்.

iii. நாணயங்களையும் ரூபாய் தாள்களையும் பரிவர்த்தனைக்காகவோ, சில்லரை மாற்றத்திற்காகவோ பெற்றுக்கொள்ளுதல். நாணயச் சட்டம் 2011-ன் பிரிவு 6(1)-ன்படி, 4-ம் பிரிவின் அதிகாரத்தின்படி, கீழ்க் கண்ட பரிவர்த்தனைகளில் அல்லது கணக்கை முடிக்க நாணயங்களை செலுத்துவது சட்டப்படி செல்லுபடியாகும்.

  1. மொத்த மதிப்பு ரூ.1000-த்திற்கு மிகாமல் நாணயங்கள் (ஒரு ரூபாய்க்குக் குறையாமல் – உ-ம் ரூ.10, 5, 2, 1 நாணயங்கள்) அளிக்கப்படலாம்.

  2. மொத்த மதிப்பு ரூ.10-த்திற்கு மிகாமல் நாணயங்கள் (50 பைசா நாணயங்கள்) அளிக்கப்படலாம்.

எனினும் நாணயங்கள் சிதையாமலும், அதன்மேல் காட்டப்பட்டதைவிட எடை குறையாமலும் இருக்கவேண்டும்.

(b) பணப் பெட்டகங்கள் உடைய எல்லா வங்கிக் கிளைகளும் பழைய கிழிந்த / சிதைந்த நோட்டுகளை மாற்றும் வசதியை எல்லா வேலை நாட்களிலும் அளிக்கவேண்டும். சில தேர்ந்தெடுக்கப்பட்ட பணப் பெட்டக் கிளைகளில் மாதத்தில் ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமையன்று பண, நாணய மாற்று வசதி அளிக்கும் திட்டம் மாற்றமின்றித் தொடரும். அத்தகைய வங்கிக்கிளைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அந்தந்த வங்கிகளிடம் கிடைக்கும்.

(c) மேலே கூறப்பட்ட, வங்கிக் கிளைகளில் நடைமுறைப்படுத்தப்படும் வசதிகளைப் பற்றியும் பொதுமக்களின் தகவல் அறிவதற்காக பரந்த அளவில் விளம்பரம் செய்யப்படவேண்டும்.

(d) எந்தவொரு வங்கிக் கிளையும் அவர்தம் முகப்புகளில் அளிக்கப்படும் சிறிய மதிப்பிலக்க நோட்டுக்களையும், நாணயங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது.

2. இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு மாற்றம்) விதிகள் 2009 – அதிகார ஒப்படைப்பு

(a) வங்கி நோட்டு அல்லது அரசாங்க நோட்டில் தொலைந்தவை, கிழிந்தவை, திருடு போனவை, முழுமையல்லாதவைகளுக்கு ஈடான தொகையை அரசாங்கத்திடமிருந்தோ, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்தோ பெறுவதை உரிமையாக எவரும் கருத முடியாதென இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் சட்டப்பிரிவு எண் 28 (சட்டப்பிரிவு 58 [2])-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சில உண்மையான நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசின் முன் அனுமதியோடு, குறிப்பிடப்பட்ட சில சூழ்நிலைகளில், சில விதிகளுக்கும், வரம்புகளுக்கும் உட்பட்டு, அந்த அரசாங்க ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி நோட்டுகளுக்கு ஈடான தொகையை இந்திய ரிசர்வ் வங்கி கருணை அடிப்படையில் வழங்கும்.

(b) கிழிந்த, பழுதடைந்த குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் கட்டணம் ஏதுமின்றி மாற்றும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு மாற்றும் விதிகள் 2009-ன் விதி எண் 2 (j)-ன்படி, பொதுமக்களின் நலனுக்காகவும், சௌகரியத்திற்காகவும் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் இது குறித்த அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

3. அழுக்கடைந்த நோட்டுக்கள் பற்றிய விரிவான வரையறை

விரைவான பரிமாற்ற வசதிகளை ஏற்படுத்துவதற்காக அழுக்கடைந்த நோட்டுக்களைப் பற்றிய வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஓர் அழுக்கடைந்த நோட்டு என்பது, சாதாரணமாக புழக்கத்தின் காரணமாக சிதைந்தோ, கிழிந்தோ காணப்படுவதாகும். அழுக்கடைந்த நோட்டுக்கள், இரண்டு துண்டுகள் ஒன்றாக இணைந்தும், இரண்டு துண்டு நோட்டுக்களும் கொடுக்கப்படும் ஒரே நோட்டுக்குச் சொந்தமானதாக, முக்கிய அம்சங்கள் விட்டுப்போகாமல் ஒரு முழு நோட்டாகவும் அமையவேண்டும். வங்கி முகப்புகளில் அரசாங்கக் கடன்களைச் செலுத்தும்போதும், வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவும் இத்தகைய நோட்டுகள் செலுத்தப்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எனினும், இந்த நோட்டுக்கள் மீண்டும் பொதுமக்களுக்குப் புழக்கத்தில் விடப்படும் நோட்டுக்களாக அளிக்கப்படக்கூடாது. பணப் பெட்டகங்களில் இருப்பாக வைக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அழுக்கடைந்த நோட்டுக்களாக ரெமிட்டென்ஸில் இவை மேலும் செயல்பாடுகளுக்காக அனுப்பப்படலாம்.

4. சிதைந்த நோட்டுக்கள் – சமர்ப்பித்தல் மற்றும் மதிப்பாணை அளித்தல்

ஒரு கரன்சி நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது இரண்டு துண்டுகளுக்கு மேல் உருவாக்கப்பட்டிருந்தாலோ அது ஒரு சிதைந்த நோட்டு எனப்படும். சிதைந்த நோட்டுக்களை எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கி விதி 2009 (நோட்டு மாற்றம்)–ன்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த நோட்டுகளுக்கு மதிப்பாணை வழங்கப்படும்.

5. எரிந்த, கருகிய, பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டு எளிதில் நொறுங்கும் தன்மையாக மாறிவிட்ட நோட்டுகள்

மிக மோசமாக, கருகிப் போன, புகை மண்டிய, பிரித்து உபயோகிக்க முடியாத நோட்டுகள் வங்கிக் கிளைகளில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அந்த நோட்டுகளின் உரிமையாளர்கள் அவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம். அங்கே அத்தகைய நோட்டுகள் சிறப்பு செயல்முறைப்படி பரிசீலிக்கப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்படும்.

6. அழுக்கடைந்த, சிதைந்த, தெளிவற்ற நோட்டுகள் மாற்றும் நடைமுறை

6.1 அழுக்கடைந்த நோட்டுகள் மாற்றுதல்

6.1.1 ஒரு தனிப்பட்ட நபர் ஒரு நாளில் எண்ணிக்கையில் 20 நோட்டுகள், மொத்த மதிப்பு ரூ.5,000 வரை வங்கி முகப்புகளில் கட்டணம் இல்லாமல் மாற்றிக்கொள்ள வங்கிகள் அனுமதிக்க வேண்டும்.

6.1.2 ஒரு தனிப்பட்ட நபர் ஒரு நாளில் எண்ணிக்கையில் 20 நோட்டுகளுக்கு அதிகமாகவோ, அல்லது மதிப்பில் ரூ. 5000-க்கும் அதிகமாகவோ, வங்கி முகப்புகளில் மாற்ற முன்வந்தால், வங்கிகள் அவற்றிற்கு உரிய ரசீது வழங்கி, அந்த நோட்டுகளுக்குரிய மதிப்பினை பின்னர் அவரது கணக்கில் வரவு வைக்கலாம். அதற்கு ஜூலை 01, 2015 தேதியிட்ட DBR. No. Leg. BC.21/09.07.006/2015-16 சுற்றறிக்கையின்படி, வங்கிகள் இதற்கு சேவைக் கட்டணம் விதிக்கலாம். ஒருவேளை சமர்ப்பிக்கப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ. 50,000-க்கும் அதிகமானால், வங்கிகள் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.2 சிதைந்த மற்றும் தெளிவற்ற நோட்டுகள் மாற்றுதல்

6.2.1 பகுதி-III, NRR 2009 (www.rbi.org.in-Publications-Occasional) நோட்டுகள் மாற்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நியமிக்கப்பட்ட வங்கிக் கிளைகள் சிதைந்த மற்றும் தெளிவற்ற நோட்டுகளை மாற்றி, மதிப்பாணை வழங்கும் பொருட்டு ரசீது அளித்து அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பணப் பெட்டகம் இல்லாத இதர வங்கிக் கிளைகள், சிறு எண்ணிக்கையிலோ அல்லது மொத்தமாகவோ நோட்டுகளை மாற்றித்தரும்போது பின்வரும் செயல்முறையைப் பின்பற்றவேண்டும்.

6.2.2 சிறிய எண்ணிக்கையில் நோட்டுகளை மாற்றும்பொழுது

ஒரு தனிநபர், பணப் பெட்டகம் இல்லாத வங்கிக் கிளைகளில் எண்ணிக்கையில் 5 நோட்டுகளை மாற்றுவதற்காக அளித்தால், பகுதி-III, NRR 2009 நோட்டுகள் மாற்றும் விதிகளில் குறிப்பிட்டுள்ள செயல்முறையைப் பயன்படுத்தி முகப்பிலேயே, அந்த நோட்டுகளின் மாற்று மதிப்பை வழங்கலாம். பணப் பெட்டகம் இல்லாத கிளைகள் சிதைந்த நோட்டுகளை மதிப்பீடு செய்ய முடியாதபோது, நோட்டுகளை , ரசீதை அளித்து பெற்றுக்கொள்ளலாம். அவை தொடர்புடைய பணப் பெட்டகம் உள்ள கிளைகளுக்கு மதிப்பீடு செய்வதற்காக அனுப்பப்படும். பணம் திருப்பி அளிக்கும் உத்தேச தேதியை (30 நாட்களுக்கு மிகாமல்) ரசீதிலேயே பதிவு செய்து, பணம் செலுத்தியவருக்குத் தெரிவிக்கவும். நோட்டுகளின் மாற்று மதிப்பினை கணக்கிலே மின்னணு முறையில் வரவு வைக்க வசதியாக நோட்டுகளை வழங்கியவரின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

6.2.3 மொத்தமாக அதிக எண்ணிக்கையில் நோட்டுகள் மாற்றும்பொழுது

ஒரு தனிநபர் (எண்ணிக்கையில்) 5-க்கும் அதிகமாக, மதிப்பில் ரூ. 5,000-க்கும் மிகாமல் இருக்குமானால், அவற்றை காப்பீட்டு அஞ்சல், வங்கிக் கணக்கு (கணக்கு எண், கிளையின் பெயர், IFSC எண்) விவரங்களுடன் அருகிலுள்ள கருவூல வங்கிக் கிளைக்கு அனுப்பி, மாற்றிக் கொள்ளும்படியாக அறிவுறுத்தலாம். அல்லது அவரை அங்கு நேரில் சென்று மாற்றிக் கொள்ள அறிவுறுத்தலாம். ரூ. 5000-க்கும் அதிகமான மதிப்புடைய சிதைந்த நோட்டுகளை அளிக்கும் நபர்களை அருகிலுள்ள கருவூல வங்கிக் கிளையை அணுகும்படி கேட்டுக்கொள்ளலாம். கருவூல வங்கிக் கிளைகள் காப்பீட்டு அஞ்சல் மூலம் பெற்ற சிதைந்த நோட்டுகளுக்குரிய மதிப்பீட்டுத் தொகையை, அவற்றைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்றம் மூலம் வரவு வைத்திடவேண்டும்.

6.3 நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளை அணுகிய நபர்களுக்கு சேவைகளில் ஏதேனும் குறைகள் இருக்குமானால், அவர்கள் உரிய வங்கிக் குறை தீர்ப்பாளரை புகார் தீர்வு நடவடிக்கைக்காக அணுகலாம். வங்கிக் குறை தீர்ப்பாளர் திட்டம் 2006-ல் இதற்கான நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி / அஞ்சல் ரசீதுகளை சான்றாவணமாக அளித்து நடைமுறையைப் பின்பற்றி புகார் செய்யலாம்.

7. Pay / Paid / Reject முத்திரைகள் குத்தப்பட்ட நோட்டுகள்

(a) “நோட்டு மாற்றும்” விதிகள் 2009ல் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு வங்கிக்கிளையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் நோட்டுகள் குறித்து தீர்ப்பளிக்கும் அதிகாரம் படைத்தவராக, வங்கிக் கிளையின் பொறுப்பு அதிகாரியும், வங்கிக்கிளை மேலாளர், கணக்கர் அல்லது பணத்துறையிலுள்ள அதிகாரி ஒருவரை நியமிக்கப்பட்ட அதிகாரியாகக் கொள்ளலாம். அந்த நோட்டுகள் குறித்த தீர்ப்பினை முடிவு செய்த பின், நியமிக்கப்பட்ட அதிகாரி தனது ஆணையைப் பதிக்கும் பொருட்டு, தேதியிட்ட Pay/Paid/Reject முத்திரைகளை நோட்டின்மேல் இட்டுத் தனது கையொப்பத்தையிட வேண்டும். Pay, Paid மற்றும் Reject முத்திரையிடப்பட்டதில் வங்கியின் பெயர் மற்றும் கிளையும் குறிப்பிடப்பட்டு, நோட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும்பொருட்டு, அவை நியமிக்கிப்பட்ட அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்படவேண்டும்.

(b) ரிசர்வ் வங்கியின் “நோட்டு திருப்பித்தருதல்” விதியின் 6(2)ன்படி Pay/Paid/Reject முத்திரையிடப்பட்ட, ரிசர்வ் வங்கியின் அல்லது வேறெந்த வங்கிக்கிளையின் பெயர் குறிக்கப்பட்ட குறைபாடுள்ள / சிதைந்த ரூபாய் நோட்டுகள் மீண்டும் ஏதாவதொரு வங்கிக்கிளையில் அளிக்கப்பட்டால், அவற்றுக்கு மதிப்பு மறுக்கப்பட வேண்டும். அந்த நோட்டுகளின் மீதுள்ள Pay, Paid முத்திரைகள் சான்றுரைத்தப்படி அத்தகைய நோட்டுகளின் மதிப்பு ஏற்கனவே குறிக்கப்பட்ட வங்கியின் கிளையிலிருந்து பெறப்பட்டுள்ளது என்பதை அதை அளிப்பவருக்குத் தெரிவிக்கவேண்டும். Pay, Paid முத்திரையிடப்பட்ட நோட்டுகளை கவனக்குறைவாகக்கூட பொதுமக்களிடையே புழக்கத்திற்கு வெளியிட வேண்டாமென எல்லா வங்கிக் கிளைகளுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வங்கிக்கிளைகளும் தமது வாடிக்கையாளர்கள் இத்தகைய முத்திரையிடப்பட்ட நோட்டுகளை எந்த வங்கியிடமிருந்தோ மற்றவரிடமிருந்தோ பெற வேண்டாமென எச்சரிக்க வேண்டும்.

8. கோஷங்கள் அரசியல் கொள்கைகள் எழுதப்பட்ட நோட்டுகள்

ரிசர்வ் வங்கியின் நோட்டு திருப்பித் தருதல் விதிகள் 2009 விதி எண் 6(3)(iii)-ன்படி அரசியல் சார்ந்த கோஷங்கள்/ கொள்கைகள் எழுதப்பட்ட நோட்டுகள் சட்டப்படி பணமென கருதப்பட மாட்டாது. அவைகளின் மதிப்பு திருப்பித் தரப்பட மாட்டாது. உருமாற்றியமைக்கப்பட்ட நோட்டுகளும் “நோட்டு திருப்பித் தருதல்” விதிகளின் விதி எண் 6(3) (ii)--ன் கீழ் மறுக்கப்பட்டு விடும்.

9. வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட நோட்டுகள்

(நோட்டு திருப்பித் தருதல்) விதிகள் 2009 விதி எண் 6(3)(ii)ன்படி வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நோட்டுகள் மாற்றுவதற்காகத் தரப்பட்டால், அவைகள் மறுக்கப்பட வேண்டும். இவ்வாறு நோட்டுகள் கிழிக்கப் பட்டனவா, சிதைக்கப்பட்டனவா என்பதைக் கண்டுபிடிப்பது கடினமென்றாலும், நோட்டுகள் ஒரே மாதிரியான குறைபாடுகள் அல்லது நோட்டுகளில் காணாமல் போன பகுதிகளும் ஒரே மாதிரியான அமைப்பில் அதிக அளவில் அளிக்கப்பட்டால் அவற்றை கவனித்துப்பார்க்கையில் மோசடிக்கான நோக்கம் தெரியவரும். இந்த மாதிரியான தருணங்களில் அத்தகைய நோட்டுகளை அளித்தவர், தரப்பட்ட நோட்டுகளின் வரிசை எண்கள் ஆகிய தகவல்களை எந்த ரிசர்வ் வங்கிக் கிளையின் பணம் வழங்குத்துறையின் ஆட்சி எல்லைக்குள் அக்கிளை இருக்கிறதோ அந்த ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் அல்லது துணைமேலாளருக்கு அறிவிக்க வேண்டும். மிகப்பெரும் அளவில் இத்தகைய நோட்டுகள் அளிக்கப்பட்டால், அந்த பகுதியைச் சார்ந்த காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்.

10. பயிற்சி

முக்கியத்துவத்தின் அடிப்படையில், பணக்கருவூலங்களையுடைய வங்கிக்கிளைகளின் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எங்களின் பணம் வழங்கல் அலுவலகங்கள் பயிற்சி அளிக்கிறது. நியமிக்கப்பட்ட அதிகாரிகள், குறைபாடுள்ள நோட்டுகளைப் பெற்று தீர்ப்பளிப்பதில் திறமையையும் நம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள வகைசெய்யும் பொருட்டு அவர்களுக்கு அறிவூட்ட இத்தகு பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம். ஆகவே, அவர்களை வங்கிகள் இத்தகு பயிற்சிகளுக்கு அனுப்புதல் வேண்டும்.

11. அறிவிப்புப் பலகைகளில் காட்சிக்கு வைத்தல்

“சிதைந்த கிழிந்த நோட்டுகள் மாற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற அறிவிப்பைத் தாங்கிய பலகையை பொதுமக்கள் அறியும்வண்ணம் வங்கிக் கட்டிடத்திலேயே வைத்திடுதல் அவசியம். எல்லா அதிகாரப்பூர்வமான வங்கிக் கிளைகளிலும் இவ்வாறு நோட்டுகள் / நாணயங்கள் மாற்றும் வசதி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி, இதர நபர்களுக்கும் அளிக்கப் படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனினும் பண மாற்றாளர்கள் மற்றும் முகவர்கள் இந்த வசதியை ஆக்கிரமிக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

12. வங்கிக் கிளைகளில் மாற்றப்படும் நோட்டுகளை அகற்றுதல்

வங்கிக் கிளைகளால் தீர்ப்பளிக்கப்பட்டு முழுமதிப்பு அளிக்கப்பட்ட கிழிந்த சிதைந்த நோட்டுகள், தணிக்கை செய்யப்படும் பொருட்டு, அவைகளின் தொடர்பு பணப் பெட்டகக் கிளைக்கு அனுப்பப்படவேண்டும். பணப் பெட்டகக் கிளைகள் இவ்வாறு வெவ்வேறு கிளைகளிலிருந்து பெறப்பட்ட சிதைந்த நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கல் துறைக்கு பழைய நோட்டுகளை அனுப்பிடும் அடுத்த ரெமிட்டென்ஸின் போது அவற்றோடு சேர்த்து, இதற்கான முறையைப் பின்பற்றி அனுப்பி வைக்கவேண்டும். பாதி மதிப்பு மட்டுமே அளிக்கப்பட்ட நோட்டுகளை பணப் பெட்டக வங்கிக் கிளைகள் (கிளையின் பண இருப்பில் கணக்கு வைக்கப்பட்டவை) முழுமதிப்பு அளிக்கப்பட்ட நோட்டுகளோடு சேர்த்தோ அல்லது தனியாகவோ காப்பீடு செய்யப்பட்ட பதிவு அஞ்சல் மூலம் அவ்வப்போது ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்கு அனுப்பி வைக்கலாம். முழுமதிப்பு அளிக்கப்பட்டவை “பண அனுப்பீடாக” ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டதாக பதிவு செய்யப்படும். ஆனால் பாதிமதிப்பு மட்டுமே தரப்பட்ட பழைய கிழிந்த நோட்டுகள் கேட்புரிமைபிரிவின் வரவாகக் கருதப்பட்டு, கணக்கில் வைக்கப்படும். அனைத்து நியமிக்கப்பட்ட வங்கிக்கிளைகளும் எங்களுடைய வழங்கல் அலுவலகங்களுக்கு மதிப்பு குறித்து தீர்ப்பளிக்கப்பட்ட நோட்டுகளின் எண்ணிக்கை பற்றிய மாதாந்திர அறிக்கையை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

13. செல்லாத நாணயங்கள்

இந்திய அரசாங்கத்தின் அரசிதழில் அறிவிக்கை எண் 2529, டிசம்பர் 20, 2010 தேதியிட்டதின்படி, 25 பைசா மற்றும் அதற்குக் குறைவான மதிப்புடைய நாணயங்கள் (அவ்வப்போது வெளியிடப்பட்டவை) ஜுன் 30, 2011-லிருந்து சட்டப்படி மதிப்பிழந்து செல்லாததாகிவிடும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழங்கல் அலுவலகங்கள் அனுப்பிடும் அறிவுறுத்தலின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்வாறு மதிப்பிழந்த 25 பைசா மற்றும் அதற்குக் குறைவான மதிப்புடைய நாணயங்கள் அந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

14. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு

  1. பிராந்திய மேலாளர்/மண்டல மேலாளர் தத்தம் வங்கிகளின் கிளைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு, மேற்கண்ட விவரங்கள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பது குறித்த தமது அறிக்கையைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். தலைமை அலுவலகம் அத்தகைய அறிக்கைகளை அவ்வப்போது பரிசீலனை செய்து தேவைப்படும் நேரங்களில் உரிய தீர்வு நடவடிக்கைகளை எடுக்கும்.

  2. இந்த விஷயத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகள் பின்பற்றப்படாவிடில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறியதாக அது கருதப்படும்.


முதன்மைச் சுற்றறிக்கை - நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றும் வசதி

சுற்றறிக்கைகளின் பட்டியல் / அறிவிக்கைகளின் மூலம்
ஒருங்கிணைக்கப்பட்ட முதன்மைச் சுற்ற்றிக்கை

வ. எண் சுற்றறிக்கை / அறிவிக்கை எண் தேதி

பொருள்

1. DCM (NE) No. 120/08.07.18/2016-17 14.07.2016 பழைய கிழிந்த, சிதைந்த, குறைபாடுடைய நோட்டுகளை மாற்றும் வசதி
2. DCM (NE) No. 3498/08.07.18/2012-13 28.01.2013 நோட்டுகளை மாற்றும் வசதி
3. DCM (Plg.) No. 6983/10.03.03/2010-11 28.06.2011 25 பைசா மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைத் திரும்பப் பெறல்
4. DCM (Plg.) No. 6476/10.03.03/2010-11 31.05.2011 25 பைசா மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைத் திரும்பப் பெறல் – பெற்றுக்கொள்ள மறுப்பது பற்றிப் புகார் படித்தல்
5. DCM (Plg.) No. 4459/10.03.03/2010-11 09.02.2011 25 பைசா மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைத் திரும்பப் பெறல்
6. DCM (Plg.) No. 4137/10.03.03/2010-11 25.01.2011 25 பைசா மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைத் திரும்பப் பெறல்
7. Gazette of India No. 2529 20.12.2010 25 பைசா மற்றும் இதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைக் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு
8. DCM (RMMT) No. 1288/11.36.03/2010-11 24.08.2010 பணப்பெட்டகக் கிளைகளில் மாற்றுதல் / வசதிகளை வழங்குவதற்கான திட்டங்கள்
9. DCM (NE) No. 1612/08.01.01/2009-10 13.09.2009 நோட்டுகள் திரும்பப் பெறல் அறிவிக்கை (விதிகள்) 2009
10. RBI/2006-07/349/DCM (NE) No. 7488/ 08.07.18/2006-07 25.04.2007 சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஏற்றுக்கொள்ளதல்
11. DCM (RMMT)/ No. 1181/11.37.01/2003-04 05.04.2004 நாணயங்களை ஏற்றுக்கொள்ளுதல்
12. DCM (NE) No. 310/08.07.18/2003-04 19.01.2004 பொதுமக்களுக்கு நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றுவதற்கு வசதிகள்
13. DCM (RMMT)/ No. 404/11.37.01/2003-04 09.10.2003 நாணயங்களைப் பெற்றுக்கொண்டு மாற்றாக நோட்டுகளை அளித்தல்
14. G-11/08.07.18/2001-02 02.11.2001 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) விதிகள் 1975 – பொது / தனியார் வங்கிகளின் பணப்பெட்டக கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் - அதிகார ஒப்படைப்பு
15. Cy. No. 386/08.07.13/2000-2001 16.11.2000 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) விதிகள் 1975 – பொது / தனியார் வங்கிகளின் பணப்பெட்டக கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் அதிகார ஒப்படைப்பு
16. G-67/08.07.13/96-97 18.02.1997 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திரும்பி அளித்தல்) விதிகள், 1975, பணப்பெட்டகங்களைப் பராமரிக்கும் தனியார் துறை வங்கிகளுக்கு முழு அதிகாரங்களை வழங்கியது
17. G-52/08.07.18/96-97 11.01.1997 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திரும்பி அளித்தல்) விதிகள், 1975, பொதுத் துறை வங்கிகளுக்கு, குறைபாடுள்ள நோட்டுகளை மாற்றித் தருவதற்கு முழு அதிகாரங்களை வழங்கியது –
18. G-24/08.01.01/96-97 03.12.1996 கிழிந்த நோட்டுகளை மாற்றித்தர ஏற்றுக்கொள்ளுதல் - தாராளமயமாக்கல்
19. G-64/08.07.18/95-96 18.05.1996 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திரும்பி அளித்தல்) விதிகள், 1975, பொதுத் துறை வங்கிகளுக்கு, குறைபாடுள்ள நோட்டுகளை மாற்றித் தருவதற்கு முழு அதிகாரங்களை வழங்கியது
20. G-71/08.07.18/92-93 22.06.1993 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திரும்பி அளித்தல்) விதிகள், 1975, பொதுத் துறை வங்கிகளுக்கு, குறைபாடுள்ள நோட்டுகளை மாற்றித் தருவதற்கு முழு அதிகாரங்களை வழங்கியது – விளம்பரம்
21. G-83/CL-1 (PSB)-91-92 06.05.1992 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத் துறை வங்கிகளின் பணப்பெட்டகக் கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் அதிகாரம் ஒப்படைப்பு
22. G-74/CL-(PSB)(Gen)-90/91 05.09.1991 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத் துறை வங்கிகளின் பணப்பெட்டகக் கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் அதிகாரம் ஒப்படைப்பு
23. 5.5/CL-1 (PSB)-90/91 25.09.1990 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத் துறை வங்கிகளின் பணப்பெட்டகக் கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் அதிகாரம் ஒப்படைப்பு
24. 8/CL-1(PSB) 17.08.1990 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத் துறை வங்கிகளின் பணப்பெட்டகக் கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் திட்டம்
25. G-123/CL-1 (PSB) (Gen) – 89/90 07.05.1990 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத் துறை வங்கிகளின் பணப்பெட்டகக் கிளைகளுக்கு நோட்டு திருப்பி அளித்தல் - திருத்தம்
26. G-108/CL-1 (PSB) (Gen) – 89/90 03.04.1990 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திரும்பி அளித்தல்) விதிகள், 1989 – ரூ. 500 மதிப்பிலக்க நோட்டுகள் – பொதுத் துறை வங்கிக் கிளைகளில் பழுதடைந்த நோட்டுகளை மாற்றுதல்
27. G-8/CL-1 (PSB) – 89/90 12.07.1989 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – இந்திய ரிசர்வ் வங்கியால் “உரிமை கோரல்களுக்கு“ என முத்திரையிடப்பட்ட பழுதடைந்த நோட்டுகள்
28. G.84/CL.1 (PSB) – 88/89 17.03.1989 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத்துறை வங்கிகளுக்கு முழுமையான நோட்டுகள் பரிமாற்ற அதிகாரமளித்தல்
29. G.66/CL-1 (PSB) – 88/89 09.02.1989 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – பொதுத்துறை வங்கிகளுக்கு பரிமாற்ற அதிகாரமளித்தல் - பயிற்சி
30. S. 12/CL-1 (PSB) – 88/89 30.09.1988 இந்திய ரிசர்வ் வங்கி (நோட்டு திருப்பி அளித்தல்) – வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட நோட்டுகள் - தீர்ப்பு
31. G.134/CL-1 (PSB) – 87/88 25.05.1988 இந்திய ரிசர்வ் வங்கியின் (நோட்டு திருப்பி அளித்தல்) விதிகளின் கீழ் முழு அதிகாரங்களின் பிரதிநிதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
32. 192/CL-1 (PSB) – 86/87 02.06.1987 இந்திய ரிசர்வ் வங்கியின் (நோட்டு திருப்பி அளித்தல்) விதிகளின் கீழ் தனியார் வங்கிகளுக்கு முழு அதிகாரமளித்தல்
33. 189/CL.2/86-87 02.06.1987 நோட்டுகளை அதன் மீது செய்திகளை எழுதுதல், கோஷங்கள் எழுதுதல் ஆகியவற்றிலிருந்து காப்பது
34. 185/CL-1 (PSB) – 86/87 20.05.1987 இந்திய ரிசர்வ் வங்கியின் (நோட்டு திருப்பி அளித்தல்) – பழுதடைந்த நோட்டுகளின் மீது “செலுத்தல்“ மற்றும் “நிராகரித்தல்“ முத்திரைகள் இடுதல்
35. 173/CL-184/85 02.04.1985 குறைபாடுள்ள நோட்டுகளை பரிமாறிக்கொள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு முழு அதிகாரங்களை வழங்குவது, அதேபோல் நடைமுறைப்படுத்துதல்
36. Cy. No. 1064/CL.1/76-77 09.08.1976 அழுக்கடைந்த நோட்டுகள் மற்றும் சிறிது சிதைக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொது மக்களுக்கு வசதிகள்
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்