இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு எப்ரல் முதல் நாள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதும் முதலில் அதன் மத்திய அலுவலகம் கொல்கத்தாவில் இயங்கியது. பின்னர் நிரந்தரமாக 1937லிருந்து அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த மத்திய அலுவலகத்தில் தான் வங்கியின் கவர்னர் அமர்ந்து கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.
தொடக்கத்தில் தனியாருக்குச்சொந்தமானதாக இருந்த போதிலும் 1949 இல் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னரே, இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமானது.
இந்திய ரிசர்வ் வங்கியின் பூர்வாங்கக் குறிப்பு ரிசர்வ் வங்கியின் பணிகளைப் பின் வருமாறு விவரிக்கிறது.
பண நோட்டுகளை வெளியிடுவதை ஒழுங்குமுறைப்படுத்துதல், இந்தியாவின் நிதியாதாரத்தில் ஸ்திரத்தன்மையைப்பாதுகாக்கும் வகையில் இருப்புகளை வைத்துக்கொள்ளுதல், பொதுவாக நாணயத்தினையும் கடன்முறையினையும் நாட்டு முன்னேற்றத்திற்கு உரியவகையில் இயக்குதல்
ரிசர்வ் வங்கியின் விவகாரங்கள் யாவும் மத்தியக் குழுவின் இயக்குநர்களால் பொறுப்பாட்சி செய்யப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச்சட்டத்தின்படி இந்த மத்தியகுழுமம் இந்திய அரசால் பணி அமர்த்தப்படுகிறது.
- இயக்குநர்கள் நான்காண்டுகளுக்கு பணியமர்த்த/ முன்மொழியப்படுகிறார்கள்.
- அமைப்பாண்மை
- அலுவலக இயக்குநர்கள்
- முழுநேரம்: ஆளுநரும் நான்கு பேருக்கு மிகாமல் துணை ஆளுநர்களும்
- அலுவலகம் சாராத இயக்குநர்கள்
- அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்கள் பலவேறு துறை களிலிருந்து பத்து இயக்குநர்கள் மற்றும் ஒரு அரசு அதிகாரி
- பிறர்: நான்கு இயக்குநர்கள் , வட்டாரக் குழுக்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவர்
பணிகள் : பொதுவான மேற்பார்வையும் வங்கி விவகாரங்களை இயக்குதலும்.
1. |
டாக்டர். டி சுப்பாராவ்
கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அலுவலகம்
மும்பை 400 001 |
@11. |
திரு. அஸிம் பிரேம்ஜி
சேர்மன்
விப்ரோ லிட்டெட்
தொட்டகனெல்லி
சர்ஜாபுர் ரோடு
பெங்களூர் 560 033 |
2 |
திருமதி சியாமளா கோபிநாத்
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை 400 001 |
@12 |
திரு குமார் மங்கலம் பிர்லா
சேர்மன்
ஆதித்ய பிர்லா க்ரூப் கம்பெனிகள்
ஆதித்ய பிர்லா சென்டர்
எஸ்.கே. அஹிரே மார்க்
வர்லி, மும்பை 400 030 |
3 |
டாக்டர் கே.சி. சக்கரபர்த்தி துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை 400 001 |
@13 |
திருமதி சசி ராஜகோபாலன்
பிளாட் எண். 10,
சாகேத் பேஸ்-II, KAPRA.,
இ.சி.ஐ.எல். அஞ்சல்
ஹைதராபாத் 500 062 |
4 |
டாக்டர் சுபிர் கோகர்ன்
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை 400 001 |
@14 |
திரு. சுரேஷ் நியோடியா
B-32, கிரேட்டர் கைலாஷ் பார்ட் 1
புது டில்லி 110 048 |
5 |
திரு. அனந்த் சின்ஹா
துணை கவர்னர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை 400 001 |
@15 |
டாக்டர். ஏ. வைத்தியநாதன்
B-1, சோனாலி அபார்ட்மெண்ட்
பழைய எண் 11,
கடற்கரைச் சாலை, கலாட்சேத்ரா காலனி
சென்னை 600 090 |
*6 |
திரு ஒய். எச். மலேகம்
சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்
மே/பா.எஸ்.பி. பில்லிமோரியா அண்டு கம்பெனி
மெஹர் சேம்பர்ஸ் (இரண்டாவது மாடி),
ஆர். கமணி ரோடு, பல்லார்டு எஸ்டேட்
மும்பை 400 001 |
@16 |
பேராசிரியர் மன்மோகன் ஷர்மா
2/3 ஜஸ்வந்த் பாக் (ரன்வால் பார்க்)
அக்பர் அலீஸ் பின்புறம்
செம்பூர் நாக்கா, மும்பை 400 071 |
*7 |
பேராசிரியர் சுரேஷ் டி டெண்டுல்கர்
பொருளியல் வல்லுநர்
AD-86-C, ஷாலிமார் பாக்,
புது டில்லி 110 088 |
@17 |
திரு.சன்ஜய் லாப்ரூ
நிர்வாக இயக்குநர்
தலைமை நிர்வாக அதிகாரி
அஸாஹி இந்தியா க்லாஸ் கம்பெனி லிட்
குளோபல் வர்த்தக பூங்கா
டவர் B, 5வது தளம்
மெஃரெளலி – குர்கவூன் ரோடு
குர்கவூன் -122002 (ஹரியானா) |
*8 |
பேராசிரியர் யூ. ஆர். ராவ்
இயற்பியல் ஆய்வுக்கூடம்
விண் ஆராய்ச்சித்துறை
அந்தரிக்ஷ் பவன்,
புது BEL ரோடு
பெங்களூரு 560 094 |
#18 |
திரு ஆர். கோபாலன்
செயலாளர்
பொருளாதார விவகாரங்கள் துறை
நிதி அமைச்சகம்
இந்திய அரசு
புது டில்லி |
*9 |
திரு. லக்ஷ்மீ சந்த்
ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
C - 12, செக்டார் 14
நொய்டா,
உத்திரபிரதேசம் 201130 |
|
|
10
@ |
திரு. ஹேச்.பி. ரானினா
வழக்கறிஞர்,
இந்திய உச்ச நீதிமன்றம்
506, ரஹேஜா செண்டர்
214, பேக்பே ரெக்ளமேஷன்
ப்ரீ பிரஸ் ஜேர்னல் ரோடு
மும்பை 400 023 |
|
|
* ரிசர்வ் வங்கி சட்டம் 1934 8(1)(b) யின் படி நியமிக்கப்பட்டவர்கள்
@ ரிசர்வ் வங்கி சட்டம் 1934 8(1)(C) , இந்திய அரசின் அறி.படி F.No.7/2/2004 – BO - .I. தேதி 27/06/2006 படி நியமிக்கப்பட்டவர்கள்
# ரிசர்வ் வங்கி சட்டம் 1934 8(1)(d) 27/06/2006 படி நியமிக்கப்பட்டவர்கள் |
- நாட்டின் நான்கு வட்டாரங்களாகிய மும்பை, கல்கத்தா, சென்னை, புதுடில்லி ஆகியவற்றுக்கு ஒவ்வொன்று.
- உறுப்பினர்:
- ஒவ்வொன்றும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டது.
- மத்திய அரசினால் பணியமர்த்தப்படுகின்றனர்.
- நான்குவருடப் பதவிக் காலத்துக்கு.
பணிகள்: வட்டார விஷயங்களில், மத்திய மன்றக் குழுவிற்கு அறிவுறுத்தல்; வட்டார கூட்டுறவு மற்றும் சுதேசி வங்கிகளின் நலன்பற்றி எடுத்துக்கூறுதல்; மத்தியக் குழுவால் அவ்வப்போது வழங்கப்படும் பணிகளைச் செயல் படுத்துதல்.
*1 |
திரு ஒய். எச். மலேகம்
சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்
மே/பா.எஸ்.பி. பில்லிமோரியா அண்டு கம்பெனி
மெஹர் சேம்பர்ஸ் (2வது மாடி),
ஆர். கமணி ரோடு, பல்லார்டு எஸ்டேட்
மும்பை 400 001 |
1. |
பேராசிரியர் சுரேஷ் டி. டெண்டுல்கர்
பொருளியல் வல்லுநர்
AD-86-C, ஷாலிமார் பாக்,
புது டில்லி 110 088 |
2. |
திரு. கே. வெங்கடேசன்
113, F பிளாக்
அண்ணாநகர் கிழக்கு,
சென்னை 600 102 |
2. |
திரு. A.K. சாய்கியா, Retd IAS H 28 செக்டார் 27
நொய்டா 201 301 |
3. |
திரு தத்தராஜ் வி. சல்காவ்கர் மேலாண்மை இயக்குநர் வி.எம். சல்காவ்கர் மற்றும் சகோதரர்கள் லிமிடெட், ஹீரா விஹார், ஏர்போர்ட் ரோடு, சிக்காலிம் வாஸ்கோட காமா, கோவா - 403 711. |
3. |
திரு. சோவான் கானன்கோ, ஓய்வுபெற்ற. ஐ.ஏ.எஸ்
17/404, கிழக்கு எண்ட் வல்லுநர்
AD-86-C, ஷாலிமார் பாக்,
புது டில்லி 110 088 |
4. |
திரு ஜயந்தி லால் B படேல், சேர்மன்,
சஹகாரி காந்த் உத்யோக் மண்டல் லிமிடெட்
காந்தேவி சுகர் பாக்டெரி தலுகா காந்தேவி நவ்சாரி மாவட்டம் பிலிமோரா வழி, குஜராத்- 396360 |
4. |
திரு. மஹமத் ஷராப்
மங்கல்ஜன் கிராமம் கோர்சாலா தாலுகா முர்ஷிதாபாத் மாவட்டம் மேற்கு வங்காளம் |
*1. |
பேராசிரியர் யூ. ஆர். ராவ்
இயற்பியல் ஆய்வுக்கூடம்
விண்ணாராய்ச்சித்துறை
அந்தரிக்ஷ் பவன்,
புது BEL ரோடு
பெங்களூர் 560 094 |
*1. |
திரு லக்ஷ்மி சந்த்
ஓய்வுபெற்ற. ஐ.ஏ.எஸ்.
செக்டர் – 14
நோய்டா
யு.பி.-2011301 |
2. |
டாக்டர் ராம்நாத்
ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும்
பல்கலை கழக துணைவேந்தர்
CSA வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் பிளாட் எண் 710, A பிளாக் ஆவாஸ் விகாஸ் காலணி ஹான்பூர், நெளபாஸ்தா, கான்பூர் 208001 |
2. |
திரு சி.பி.நாயர்
ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் கேரள அரசு நாராயணீயம், ஜவகர் நகர்,திருவனந்தபுரம் - 695 041 |
3. |
டாக்டர் பிரிதம் சிங்இயக்குநர்,
நிர்வாக மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம், மெஹ்ராலி ரோடு, சுக்ராலி, குர்கான்-122 001
|
3. |
டாக்டர் எம்.கோவிந்த ராவ்
இயக்குநர்,
பொது நிதி கொள்கைக்கான தேசிய நிறுவனம்,
18/2, சத் சங்க விகார் மார்க்,
சிறப்பு கல்விநிறுவனப் பகுதி (ஜேஎன்யூ அருகில்)புது தில்லி – 110067 |
4. |
திரு. கமல் கிஷோர் குப்தா பட்டயக்கணக்கர் கமல்அண்டுக்கோ 1372,காஷ்மீர்கேட் புதுதில்லி-110006 |
4. |
திருமதி தேவகி ஜெய்ன்
தரங்கவனா, D-5, 12 க்ராஸ்
ஆர்.எம்.வி.எக்ஸ்டென்ஷன்
பெங்களூர் – 560080 |
5. |
திரு.மிஹிர் குமார் மொய்திரா H-205, வெம்ப்ளே எஸ்டேட், ரோஸ்வுட் நகரம், செக்டார்49-50 குர்கான் 122001 |
5. |
|
*மத்தியக் குழுக்களின் பிரதிநிதியாக நவம்பர் 3,2010 அன்று நியமிக்கப்பட்டனர் |
நிதியியல் மேற்பார்வைக் குழுமத்தின் வழிகாட்டுதல்படி இந்திய ரிசர்வ் வங்கி இப்பணியை மேற்கொள்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மையக்குழுமத்தின் ஒரு குழுவாக இந்த நிதியியல் மேற்பார்வைக் குழுமம் 1994 நவம்பரில் துவக்கப்பட்டது.
நோக்கம்
வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய மேற்பார்வையும் கண்காணிப்பும்.
அமைப்பு
ரிசர்வ் வங்கியின் மையக் குழுமத்தின் நான்கு இயக்குநர்களை உறுப்பினர்களாக முன்மொழிந்து நிதியியல் மேற்பார்வைக் குழுமம் துவக்கப்பட்டது. இதன் தலைவராக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இருப்பார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்கள் பதவி முறை உறுப்பினர்களாக இருப்பர். ஒரு துணை ஆளுநர் குறிப்பாக, வங்கிகளின் ஒழுங்குமுறை மேற்பார்வைத் துறைக்கு பொறுப்பாக உள்ள துணை ஆளுநர், குழுமத்தின் உதவித்தலைவராக இருப்பார்.
குழுமத்தின் கூட்டங்கள்
சாதாரணமாக மாதம் ஒரு முறை குழுமத்தின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். கண்காணிப்பு மேற்பார்வைத் துறைகளின் ஆய்வறிக்கைகள் மற்றும் மேலாண்மை விவகாரங்கள் விவாதிக்கப் படவேண்டியவை.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் சட்டரீதியான ஆய்வுகள், உள்ளக ஆய்வுகள் மேம்பாட்டுக்காகவும் உயுர்வுக்காகவும் தணிக்கைத் துணைக் குழு ஒன்றை குழுமம் நியமிக்கும். துணை ஆளுநரைத் தலைவராகவும், மையக் குழுமத்தின் இரு இயக்குநர்களை உறுப்பினர்களாக கொண்டு ஓராண்டு இத்துணைக்குழு செயல்படும்.
வங்கி மேற்பார்வைத் துறை (DBS), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத் துறை (DNBS), நிதிநிறுவனங்கள் பிரிவு (FID) ஆகிய ரிசர்வ் வங்கி துறைகளை இக்குழு மேற்பார்வையிடுகிறது. ஒழுங்குமுறைகள், மேற்பார்வை மற்றும் கண்காணித்தல் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் தேவையான ஆணைகளைப் பிறப்பிக்கிறது.
செயல்பாடு
குழுமம் செயல்படுத்திய முனைப்பான செயல்களில் சில:
- வங்கிகள் மீதான ஆய்வுகளைச் சீரமைத்தல்
- வங்கியின் இருப்பிடத்திற்குச் செல்லாமலேயே அவைகளிடமிருந்து அறிக்கைகள் பெற்று ஆய்வு மேற்கொள்வது.
- சட்டரீதியான தணிக்கையாளர்களின் பங்கை திறம்பட மேம்பப்படுத்துவது மேற்பார்வையிட்ட நிறுவனங்களில் உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்துவது.
குழுமத்தின் தணிக்கைக்குழு வங்கிகளில் இருக்கும் உடனுக்குடன் ஆய்வினை மறு ஆராய்ச்சி செய்தது. சட்ட ரீதியான தணிக்கையாளர்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகள், தணிக்கையாளர்களை நியமிக்கும் முறைகள், சட்டரீதியான ஆய்வறிக்கையின் தரம், முழுப்பரப்பு, மேற்பார்வையிடப்பட்ட நிறுவனத்தின் வெளியிடப்பட்ட கணக்கறிக்கையில் அதிகமான அளவில் முக்கியமான விபரங்கள் தருதல் மற்றும் அதிகமான ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை பற்றியெல்லாம் நிதியியல் மேற்பார்வைக் குழு பரிசீலனை செய்யும்.
தற்போதைய கவனமையம் (Focus)
- நிதி நிறுவனங்களை மேற்பார்வையிடுதல்
- கணக்குகள் தொகுத்தளித்தல்
- வங்கி மோசடியில் உள்ள சட்ட சிக்கல்கள்
- வருமானம் ஈட்டா செயலற்ற சொத்துகளை மதிப்பீடு செய்வதில் மாறுபட்ட நிலை. வங்கிகள் மீதான மேற்பார்வையில் அவைகளின் தரத்தை நிர்ணயித்தலும் தக்க முன்மாதிரியான பின்பற்றக்கூடிய வழிகாட்டுதல்களை அளித்தலும்.
நாட்டிலுள்ள கொடுப்பு முறைகளை மேற்பார்வையிடவும் நெறிப்படுத்தவும் தேவையான உரிய அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கிக்கு "கொடுப்பு மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007" அளிக்கிறது. இந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொடுப்பு மற்றும் தீர்வு முறைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை மன்றம் இந்த அதிகாரத்தைச் செயல்படுத்திடும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்றத்தின் ஒரு அங்கமாக, குழுவாக, கொடுப்பு முறைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை மன்றம் செயல்படும்.
நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
நாட்டிலுள்ள கொடுப்பு முறைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குறித்த கொள்கையை வகுத்தல் இந்த மன்றத்தின் நோக்கமாகும். நடைமுறையில் உள்ள மற்றும் வருங்கால கொடுப்பு மற்றும் தீர்வு முறைகளுக்கான தரநிலைகளை நிர்ணயித்தலும் இந்த மன்றத்தின் நோக்கமாகும். கொடுப்பு முறைகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்தல், தீர்வு முறைகளில் அங்கத்தினராவதற்கு உரிய தகுதிகளை தீர்மானித்தல். மேலும், ஏற்கனவே அங்கத்தினராக உள்ளவர்கள் அதைத் தொடர்ந்திட, நிறுத்திட அல்லது தள்ளுபடி செய்திட அடிப்படைக் காரணங்களை அளித்தல். கொடுப்பு மற்றும் தீர்வு முறைச் சட்டம் 2007ன்கீழ் வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல். கொடுப்பு முறைமைகளை நடத்துபவர்களுக்கு, வழிகாட்டுதல் மற்றும் அவர்களிடமிருந்து அறிக்கைகள், தகவல் பெறுதல்.
அமைப்பு
கொடுப்பு மற்றும் தீர்வு முறை மன்றத்தின் தலைவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆவார். இதர துணை ஆளுநர்கள் அதன் அங்கத்தினர்கள் ஆவார்கள். அதோடு, கொடுப்பு மற்றும் தீர்வு முறைகளின் துறைக்கு பொறுப்பாளியாக உள்ள துணை ஆளுநர் இந்த கொடுப்பு மற்றும் தீர்வு முறை மன்றத்தின் உதவித் தலைவர் ஆவார். மத்திய நிர்வாக மன்றத்தின் 3 இயக்குநர்கள் இந்த குழுவின் அங்கத்தினர்கள் ஆவார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர் இந்த குழுவின் கூட்டங்களுக்கு நிரந்தர அழைப்பாளர் ஆவார்கள். இத்துறையில் தேர்ந்த அனுபவம் உடையவர்கள் இக்குழுவின் கூட்டங்களுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிக முறையிலோ அழைக்கப்படலாம்.
கொடுப்பு மற்றும் தீர்வு முறைகள் துறை இக்குழுவிற்கு எல்லாவிதத்திலும் உதவிடும்.
தற்போதைய கவனமையம்(Focus)
- கொடுப்பு முறைகளுக்கு அங்கீகாரம்/மறுப்பு அளித்தல்
- காகிதவடிவிலான கொடுப்பு முறைகளிலிருந்து மின் ஊடக முறையிலான கொடுப்பு முறைகளுக்கு மாறிட ஊக்கமளிக்கும் வகையில் கொள்கைகளை வடிவமைத்தல்
- புதிய கொடுப்பு முறைகளுக்கேற்ற நெறிமுறைச் சட்ட அமைப்பினை ஏற்படுத்துதல்
- கொடுப்பு முறைகளை வாடிக்கையாளருக்கு மேலும் சுலபமாக இருக்கும்படி அமைத்துத் தருதல்
- காகித வடிவில்/மின் ஊடக வடிவில் உள்ள கொடுப்பு முறைகளின் பாதுகாப்பு மற்றும் திறனை மேம்படுத்துதல்
முக்கியச் சட்டங்கள்
- இந்திய ரிசர்ப் வங்கிச் சட்டம், 1934; ரிசர்வ் வங்கியின் பணிகளை வரையறுக்கிறது.
- வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 1949: நிதிப்பிரிவினைக் வரையறுக்கிறது.
குறிப்பிட்ட பணிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்
- பொதுக் கடன் சட்டம், 1944/ அரசுப்பத்திரங்கள் சட்டம் (வர உள்ளது) அரசுக்கடன் வணிகத்தை நெறிப்படுத்துகிறது.
- பத்திர ஒப்பந்த (ஒழுங்குமுறை) சட்டம் 1956: அரசுப் பத்திர சந்தையை ஒழுங்குமுறைப் படுத்துகிறது.
- இந்திய நாணயச் சட்டம், 1906; பணத்தாள், நாணயம் ஆகியவற்றை நெறிப்படுத்துகிறது.
- அந்நியச் செலாவணி வரன்முறைச்சட்டம், 1973/அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம், 1999 பன்னாட்டு வணிகத்தையும் அந்நியச் செலாவணிச் சந்தையையும் நெறிப்படுத்துகிறது.
- கொடுப்பு மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007: .கொடுப்பு மற்றும் தீர்வு முறைகளை மேற்பார்வையிட்டு நெறிப்படுத்துகிறது.
வங்கியியல் செயல்பாடுகளைக் நெறிப்படுத்தும் சட்டங்கள்
- கம்பெனிகள் (குழுமங்கள்) சட்டம், 1956/வங்கிகளையும் கம்பெனிகளாக ஏற்றுக்கொள்கிறது.
- வங்கித் தொழில் செயல் கம்பெனிகள் (கைப்பற்றுதல் மற்றும் பொறுப்பேற்றல் மாற்றம்) சட்டம், 1970/1980 வங்கிகள் தேசியமயமாக்கம் தொடர்பானது.
- வங்கியாளர் புத்தக சான்றுச் சட்டம்
- வங்கியியல் இரகசியச் சட்டம்
- 1881 ஆம் ஆண்டு பணமாகமாற்றும் உபகரணங்கள் சட்டம்
தனி நிறுவனங்களை நெறிப்படுத்தும் சட்டம்
- பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம், 1954
- தொழில்வளர்ச்சி வங்கி (பொறுப்பேற்றலில் மாற்றம் மற்றும் நீக்கம் செய்தல்) சட்டம், 2003
- தொழில் நிதிக்கழகம் (பொறுப்பேற்றலில் மாற்றம் மற்றும் நீக்கம் செய்தல்), 1993
- விவசாயம் மற்றும் கிராம மேம்பாடுக்கான தேசிய வங்கிச் சட்டம்
- தேசிய வீட்டுவசதி வங்கிச் சட்டம்
- வைப்புத்தொகை, காப்பீடு மற்றும் கடன் பொறுப்புக்கூட்டு நிறுவனச் சட்டம்
பண அதிகாரி:
- பணக்கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்தி மேற்பார்வை செய்கிறது.
- நோக்கம்: விலைகளின் நிலைத்தன்மையைப் பேணுதல்;உற்பத்திப்பிரிவுகளுக்குபோதுமானநிதியோட்டத்தைஉறுதிசெய்தல்
நிதியமைப்பினை மேற்பார்வையிடுதலும் ஒழுங்கு முறைப்படுத்துதலும்
- நாட்டின் வங்கியியல், நிதியியல் இவைகளுக்குட்பட்டு இந்திய வங்கிச் செயல்பாடுகளுக்கான பரந்த வழிமுறைகளை வகுத்தளித்தல்
- நோக்கம்: வங்கியியல் அமைப்பின் மீதுள்ள மக்கள் நம்பிக்கையைப் பேணுதல், வைப்பீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல், பொதுமக்களுக்குக்குக் குறைந்த செலவில் வங்கியியல் சேவைகளை வழங்குதல்.
- கொடுப்பு முறைகளின் மேற்பார்வையாளர் மற்றும் நெறிமுறையாளார்
- கொடுப்பு முறைகள் அமைத்திட அங்கீகாரம் அளித்தல்
- கொடுப்பு முறைகளின் செயல்பாட்டிற்கு தர நிலைகளை நிறுவுதல்
- கொடுப்பு முறைகளை செயல்படுத்துபவர்களுக்கு வழிகாட்டுதல, அவர்களிடமிருந்து அறிக்கைகள்,தகவல் பெறுதல்
அந்நியச் செலாவணி மேலாளர்
- அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 ஐ நிர்வகிக்கிறது.
- நோக்கம்: பன்னாட்டு வணிகத்திற்கும் பணவழங்கலுக்கும் வழிகோலுதல், மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை இந்தியாவில் ஒழுங்காகவும் முறையாகவும் பாதுகாத்து வளர்த்தல்.
பணம் வழங்கு அதிகாரி
- பணத்தாளினை வழங்குகிறது: மாற்றுகிறது; புழக்கத்துக்குத் தகுதியற்ற பணத்தாள்களையும் நாணயங்களையும் அழிக்கிறது.
- நோக்கம்: பொதுமக்களுக்குப் போதுமான அளவில் பணத்தாள்களையும் நாணயங்களையும் தரமிக்கதாக வழங்குதல்.
மேம்பாட்டுப் பணி
- தேசிய நோக்கங்களுக்கு உதவும் வகையில் பரந்துபட்ட முன்னேற்றப் பணிகளை மேற்கொள்கிறது.
தொடர்புடைய பணிகள்
- அரசின் வங்கி: மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வணிக வங்கிப் பணிகளைச் செய்கிறது; மேலும் அவர்களின் வங்கியாளராகவும் செயல்படுகிறது.
- வங்கிகளின் வங்கி: அனைத்து அட்டவணை வங்கிகளின் கணக்குகளையும் பராமரிக்கிறது.
4 மண்டல அலுவலகங்கள்;15 கிளைகள் மற்றும் 5 துணை அலுவலகங்கள்.
ஆறு பயிற்சி நிறுவனங்களைக் கொண்டுள்ளது
- விவசாய வங்கிக் கல்லூரி, வங்கியாளர் பயிற்சிக் கல்லூரி, இந்திய ரிசர்வ் வங்கிப் பணியாளர் கல்லூரி ஆகிய மூன்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பிரிவுகளாகும்.
- வங்கி மேலாண்மைத் தேசிய நிறுவனம், இந்திராகாந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (IGIDR) வங்கியியல் தொழில் நுட்பத்தில் மேம்பாடு மற்றும் ஆய்வுக்கான நிறுவனம் (IDRBT) ஆகியவை சுய அதிகாரம் பெற்ற நிறுவனங்கள்.
பயிற்சி நிறுவனங்கள் பற்றிய விவரமான தகவல்களுக்கு பிற இணைப்புகள் என்னும் பகுதியிலுள்ள அவர்களின் இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்.
முழுமையும் சொந்தமானவை: தேசிய வீட்டுவசதி வங்கி (NHB), வைப்புத்தொகை மற்றும் கடன் காப்பீடுக் கழகம் (DICGC), பாரதீய ரிசர்வ் பாங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிட்டெட் (BRBNMPL)
பெரும்பான்மைப் பங்கு:, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி (NABARD) |