நவம்பர் 01, 2016
மக்கள்தொகைக் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு 2011-ன்படி இந்திய ரிசர்வ்
வங்கிக் கிளைகள் சுட்டிக் காட்டிகளைப் புதுப்பிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி தனது வங்கிக்கிளைகளை சுட்டிக்காட்டும் கணினி இணைப்பை புதுப்பித்துள்ளது. இந்த இணைப்பு, வர்த்தக வங்கிகளின் கிளைகள் / அலுவலகங்களின் பட்டியலைச் சுட்டிக் காட்டும். திருத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ன்படி, வெவ்வேறு மக்கள்தொகை பகுப்பிற்கேற்ப வங்கிக் கிளைகள் / அலுவலகங்கள் பகுக்கப்பட்ட வகைகளை இந்த இணைப்பு தற்போது காட்டிடும் இந்திய ரிசர்வ் வங்கியின் செப்டம்பர் 01, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை (RBI/2016-17/60/DBR No. BAPD BC. 12/22.01.001/2016-17)-யில் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ன்படி மக்கள்தொகைப் பகுப்பிற்கான செயல்பாட்டு தேதி செப்டம்பர் 1, 2016.
வங்கிக் கிளைகள் உள்ள கிராமம் அல்லது நகர்ப்புறம் நான்கு வகைகளாகப் (கிராமப்புறம், பகுதியளவு ஊரகம், நகர்ப்புறம், பெருநகரம்) பிரிக்கப்பட்டுள்ளது. அது மக்கள்தொகைப் புள்ளி விவரக் கணக்கெடுப்பு 2011-ன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அட்டவணைகள், கிளைகள் சுட்டிக்காட்டும் விவரங்கள் அவற்றை அடையாளங்காணும் வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கிய https://rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2035 இணையதள இணைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கிளை அதிகார வழங்கல் குறித்த மூலச்சுற்றறிக்கையின் பேரில், வங்கிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இந்த தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி தொகுத்து அளிக்கிறது.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1081 |