Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - மறுதலிப்பு
 

 

 

புள்ளி விவரங்கள் சரியானவை என்பதை உறுதிசெய்ய எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஒரு வேளை ஐயமிருந்தால் தயவு செய்து அச்சில் வந்தவைகளோடு சரிபார்த்துக் கொள்ளவும்.

 

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வகையிலும் முயற்சி மேற்கொண்டு, இந்தத்தளத்தில் இன்றைய வரையிலான மற்றும் சரியான தகவலைப் பராமரித்தாலும், இத்தளத்திலுள்ள செய்திகளின்  முழுமைக்கும் திருத்தமான தன்மைக்கும் ரிசர்வ் வங்கி எந்தப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் பார்வையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.  அத்தோடு அதன் உபயோகத்தைப்பொறுத்த வரை பார்வையாளர்கள் தங்களது சொந்த கவனத்தையும் திறனாய்வையும் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.

 

பொருத்தமான மற்றும் தொடர்புள்ள விவரங்களுக்கான உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, உங்களுக்கு உதவிட மற்ற இணையதளத்தின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.  எனினும் ரிசர்வ் வங்கிக்கு அத்தளங்களிலுள்ள விஷயங்களுக்கான பொறுப்பு ஏதுமில்லை.

 

இந்த இணையதளத்தின் எந்த பகுதியிலாவது, ஒரு தனிநபர் அல்லது ஸ்தாபனம் பட்டியலிடப்பட்டதாலேயே அந்தத் தனிநபர் அல்லது ஸ்தாபனத்தின், சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ரிசர்வ் வங்கி எந்த விதத்திலும் ஆதரவுக் கருத்து கூறுவதாக ஆகாது.

 

அத்தாட்சி உறுதிமொழி மற்றும்  பொறுப்புடைமைக்கு மறுதலிப்பு

 

இந்த இணையதளத்தில் கொடுக்கப் பட்டுள்ளவை எந்த வித அத்தாட்சி உறுதியும்  இல்லாமல் அப்படியே உள்ள என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.  கீழ்கண்டவை குறித்து, பதில் சொல்ல வேண்டிய கடமையோ, பொறுப்போ ரிசர்வ் வங்கிக்கு இல்லை - 

 

அ) திட்டநுட்பம், சரியான தன்மை, நம்பகத்தன்மை, தற்போதுள்ள நேரத்தன்மை, வரம்பு மீறாமை, தலைப்புரிமை, வணிகத்தன்மை அல்லது இந்த இணைய தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளவை வேறு ஏதேனும் குறிப்பிட்ட நோக்கத்திற்கு தகுதியானவை;

 

ஆ)  இந்த இணையதளம் மூலமாகக் கொடுக்கப் பட்டுள்ளவை அல்லது இங்கு தொடர்பு படுத்தப்பட்ட பணிகள் இடையூறு இல்லாமலும், தவறு இல்லாமலும் அல்லது அந்தத் தவறுகள் திருத்தப்படும் என்றோ, இந்த இணையதளம் மற்றும் கணிணி இணைப்பு ஆகியவை தீங்கு விளைக்கும் அடிப்படைக்கூறுகள் மற்றும் அனைத்து வைரஸ்களிடமிருந்தும் விடுவிக்கப்பட்டவையாக உள்ளன என்றோ .

 

இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) ஏற்படும் எத்தகைய தீங்கிற்கோ (அ) இழப்பிற்கோ ரிசர்வ் வங்கி பொறுப்பேற்காது.  இந்த இணையதளத்தில் அடங்கியுள்ள அல்லது பெறப்படும் தகவல்களை நம்புவதால் ஏற்படும் எத்தகைய தீங்கு (அ) இழப்பு மட்டுமல்லாமல் இன்னபிற இழப்புகளும் இதில் அடங்கும்.

 

இந்த இணையதளத்தில் உள்ளவை நிதி அல்லது மற்ற தொழில் ஆலோசனையாக ஏற்கத்தக்கவை அல்ல. நிதி மற்றும் தொழிற்சார்ந்த ஆலோசனை தேவைப்படின், தகுதியான வல்லுனரின் சேவைகளை நாட வேண்டும்.

 

அணுகும் உரிமை

 

இந்தத் தளத்தை அவ்வப்போது, காலத்திற்கேற்ப மாற்றியமைக்கவோ திருத்தவோ ரிசர்வ் வங்கி தனக்கே உரிமை கொண்டுள்ளது.   மேலும் குறிபிட்ட நபர் இத்தளத்தை அணுகுவதைத் தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ, உள்ள உரிமையை ரிசர்வ் வங்கியே கொண்டுள்ளது; அல்லது ஒரு குறிப்பிட்ட இணைய முகவரியிலிருந்து அணுகுவதைத் தடைசெய்ய உள்ள உரிமையும் ரிசர்வ் வங்கிக்கே உரித்தானது.  இத்தகைய நடவடிக்கைகளை எந்தக்காரணமும் காட்டாமல் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

 

இந்த இணைய தளத்திலிருந்து மற்ற தளங்களுக்கான தொடர்புகள் 

 

இந்த இணைய தளம், ரிசர்வ் வங்கி நிர்வகிக்காத மற்ற இணைய தளங்களுடன் உயர் தொடர்பு (hyperlink) கொண்டுள்ளது.  அப்படிப்பட்ட இணைய தளங்களில் சொல்லப்பட்டவைக்கு ரிசர்வ் வங்கி பொறுப்பு ஏற்காது. அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பு ஏற்காது.  அந்தத் தளங்களைத் தொடர்பு கொள்வதில் ஏற்படும் நட்டத்திற்கும் பொறுப்பு ஏற்காது.  உயர் தொடர்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அத்தகைய இணைய தளங்களை அணுகுவதில் ஏற்படும் ஆபத்து நேர்வுகளுக்கு நீங்களே பொறுப்பாகிறீர்கள். 

 

மற்ற இணைய தளங்களுக்கான் உயர் தொடர்புகள், இந்த இணைய தளத்தை உபயோகிப்பவரின் வசதிக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.  எந்தச்சூழ்நிலையிலும், இந்த இணைய தளத்தோடு இணைப்பு தரப்பட்ட வேறு இணைய தளங்க்ளில் காணப்படும் எந்த ஒரு வணிகம் அல்லது சேவை அடையாளம், சொல்லச்சுகள், சிறப்புக் குறியீடுகள் போன்ற பிற பொருட்களுக்கோ விபரங்களுக்கோ ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்டதோ தொடர்புடையதோ அல்ல.

 

மற்ற இணையதளங்களிலிருந்து இந்த இணைய தளத்திற்கான தொடர்புகள்

 

கீழே சொல்லப்பட்டவை தவிர, இந்த இணைய தளத்தை அல்லது இதில் கொடுக்கப்பட்டுள்ளவைகளை  இணைப்பதும், தொடர்பு கொள்வதும், தயார் நிலை நினைவில் இருத்திக் கொள்வதும், பொருந்துவதும் தடை செய்யப்படுகின்றன. 

 

முகப்புப் பக்கத்தை இணைக்க ரிசர்வ் வங்கிக்கு எழுத்தில் தெரிவித்த பின்னர் நீங்கள் இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை, http://www.rbi.org.in, இணைக்கலாம்

 

முகப்புப் பக்கம் நீங்கலாக மற்ற பக்கங்களை உயர்தொடர்பு கொள்ள (hyperlinking), பயன் படுத்துபவர் உரிய விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.  இந்த இணைய தளத்திற்கோ அல்லது இதில் உள்ளவைக்கோ உயர் தொடர்பு கொள்ளுமுன் அல்லது அது சம்பந்தமான இதர நடவடிக்கைகளை மேற் கொள்ளுமுன்னர் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவேண்டும்.  பயன்படுத்துவோருக்கான அனுமதி அளிக்கும் போதே சில நிபந்தனைகளையும் விதிக்க  ரிசர்வ் வங்கிக்கு உரிமை உண்டு.

 

இந்த இணைய தளத்தை, அதில் கூறப்பட்டுள்ள விபரங்களைத் தொடர்பு கொள்ளுதல் பொருத்துதல் என்பது, உபயோகிப்பாளர் இத்தகைய நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒத்துக்கொள்கிறார் என்றே பொருள் கொள்ளப்படும்.   நிபந்தனைகள் கட்டுப்பாடுகளில் பின்னர் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும், அவைகளையும் ஒத்துக்கொண்டதாகவே பொருள் கொள்ளப்படும்.  இந்த நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் பயன்படுத்துவோருக்கு ஏற்புடையதாக இல்லையெனில் அவர் இணையதளத்திற்கான தொடர்பைத் துண்டித்துக்கொள்ளவேண்டும்.

 

பொருத்தமில்லாத தரக்குறைவான, அவதூறான, நாகரீகமற்ற, ஆபாசமான, சட்டத்துக்குப் புறம்பான தகவல்கள், விவரங்கள், தலைப்புக்கள், பெயர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய எந்தவொரு தளத்தையும்  தொடர்பு கொள்ளுதலைச் செயலற்றதாக ஆக்கும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு. எழுத்திலுள்ள எந்தச் சட்டத்திற்கும் புறம்பானவை, பொருத்தமான அறிவாற்றல் சார்ந்த சொத்துக்கள், உடைமை உரிமையாண்மைக்கு உட்பட்டவை, அந்தரங்கம் காக்கும் விளம்பர உரிமை ஆகியவறுக்கும்  புறம்பானவைகளையும் உள்ளடக்கிய எந்தவொரு தளத்தையும்  தொடர்பு கொள்ளுதலைச் செயலற்றதாக ஆக்கும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

 

இந்த இணையதளத்திலிருந்து அல்லது இந்த இணையதளத்திற்கு ஏற்படும் தொடர்புகளில் உள்ள அங்கீகாரம்  பெறாத இணையதளங்கள் அல்லது அவற்றில் கூறப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைச் செயலற்றதாக ஆக்கும் உரிமையும், மறுதலிக்கும் உரிமையும் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

 

 

 

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்